தளபதியின் ஆளப்போறான் தமிழன்!

தளபதி விஜய் நடிப்பில் இளம் முன்னணி இயக்குநர் அட்லி இயக்கும் புதிய திரைப்படம் ‘மெர்சல்’. இந்த திரைப்படத்தின் முதல் லுக், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இந்த முதல் லுக் டுவிட்டரிலும் டிரண்டிங் ஆனது. அதே போல் மலேசிய தளபதி ரசிகர்களும் சமூக தளங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் இன்று 09-08-2017 மலேசிய நேரப்படி பிற்பகல் 2.30க்கு மெர்சல் திரைப்படத்தின் அறிமுகப் பாடலின் வரியை தேன்டான்டாள் பிக்சஸ் வெளியிட்டது. அதை இயக்குநர் அட்லி பகிர்ந்தார். ‘ஆளப்போறான் தமிழன்’ என்று தொடங்கும் இந்த பாடலின் முதல் லுக் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது. இதில் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் ஒரு கையை மட்டும் உயரமாக தூக்கி உற்சாகமாக பாடுவதுபோல் இருக்கின்றது.

நேற்று முதல் டுவிட்டரில் உள்ள தளபதி ரசிகர்கள் இந்த பாடலின் அறிமுகத்திற்காக காத்திருப்பதாக கருத்துகளை பதிவிட்டு வைரலாக்கினார்கள். ‘பக்கா மாஸ் மெர்சல் சிங்கல்’ என்ற அடைமொழியை வைரலாகினார்கள். இப்போது ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற அடைமொழி வைரலாகி வருகின்றது.