அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில் இன்னமும் முதல் கோலைத் தேடும் ரொனால்டோ !
விளையாட்டு

இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில் இன்னமும் முதல் கோலைத் தேடும் ரொனால்டோ !

ரோம், செப்.2 – 

இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில் நடப்பு வெற்றியாளரான யுவன்டஸ் சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல்களில் பர்மாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் , யுவன்டசின் இரண்டு கோல்களையும் மரியோ மன்சூக்கிச்சும், பிலேய்சே மத்தியூடியும் போட்டனர்.

எனினும் கடந்த ஜூலை மாதம் 10 கோடி ஈரோ டாலரில் யுவன்டசில் இணைந்த போர்ச்சுகலின் கிறிஸ்டியோனா ரொனால்டோ இன்னமும் தனது முதல் கோலைத் தேடிக் கொண்டிருக்கிறார். ரியல் மாட்ரிட் கிளப்பில் அதிரடிப் படைத்த ரொனால்டோ, யுவன்டசில் எப்போது தனது கணக்கைத் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆட்டத்தின் 2 ஆவது நிமிடத்தில் யுவன்டசின் முதல் கோலை மரியோ மான்சூக்கிச் போட்ட வேளையில்,  அர்செனலின் முன்னாள் ஆட்டக்காரர் கெர்வின்ஹோ போட்ட கோலின் மூலம் பர்மா அணி ஆட்டத்தை சமப்படுத்தியது. இரண்டாம் பாதியில் பிலேய்ஸ் மத்தியூடி போட்ட கோல், யுவன்டசின் வெற்றியை உறுதிச் செய்தது.

26 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ, மேற்கொண்ட தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. ரொனால்டோ தனது தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.  ஐந்து முறை உலகின் சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றுள்ள ரொனால்டோ எப்போது யுவன்டசில் தனது முதல் கோலைப் போடுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன