திடீர் ரகசிய திருமணம் செய்தார் பிக்பாஸ் டேனியல்..!

0
4

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய டேனியல்,  தமது காதலியான டெனிஷாவை (குட்டுவை) திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் டேனியல் சுமார் 75  நாட்களாக அவ்வீட்டில் இருந்து எவிக்‌ஷன் மூலம் நேற்று வெளியெற்றப்பட்டார்.

வெளியேறுவதற்கு முன்னர், தமது திருமணம் நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹான் முன்னிலையில்தான் நடக்கும் என்று கூறிச்சென்றார்.

முன்னதாக அவரின் காதலி குட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து டேனியை முத்த மழையில் நனைய வைத்தார். இதனிடையே, இவர்களின் காதலுக்கு டெனிஷா குடும்பதார் சம்மதிக்காத நிலையில் வெளியேறிய டேனியல், இன்று டெனிஷாவை திடீரென பதிவு திருமணம் செய்து கொண்டார்.

உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் கணவன் – மனைவியாக எங்களின் வாழ்க்கை பயணத்தை துவங்குகிறோம் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் டேனியல், தமது பதிவு திருமண படத்தையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.