ஒரே நாள் பிரபலம் என்பது போல் ஒரே நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரபல மாலுக்கு சென்று ரசிகர்களின் அன்பையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், ஓவியா தற்போது விஷ்ணு, ரெஜினா நடிக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு வந்த வாய்ப்பு இது என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதற்கு முன்னரே ஓவியா படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

பிக் பாஸ்விற்கு பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது