பரணி போல் இந்த பிரபலம் ஒதுக்கப்படுகிறாரா?

0
15

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஒளிபரப்பானதில் ரசிகர்கள் எதிர்ப்பாராதது பரணி மற்றும் ஓவியா வெளியேற்றம். பரணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவராலும் ஒதுக்கப்பட்டு அங்கு இருக்க முடியாமல் வெளியேறினார்.

அதேபோல் மற்றவர்கள் ஒதுக்கினாலும் தைரியமாக இருந்த ஓவியா சில விஷயங்களால் உடல் நிலை சரியில்லாமல் வெளியேறினார். இந்த நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் புரொமோவில் ஷக்தி, வையாபுரி, சினேகன், ஆரவ் அனைவரும் கணேஷ் அவர்களை தாக்குகின்றனர்.

நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்க்கிறீர்கள், மற்றவர்களின் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை போன்ற விஷயங்களை கூறி தாக்குகிறார்கள்.