எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

0
3

கோலாலம்பூர், ஆக 9-

நாளை முதல் ரோன் 95 பெட்ரோல் விலை 5 காசு உயர்ந்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 12 காசாக நிர்ணயிக்கப்பட்டது.

அதே வேளையில், ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 7 காசு அதிகரித்தது. ரோன் 97 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 39 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 1 காசு அதிகரித்து ஒரு லிட்டருக்கு 2 வெள்ளி 6 காசாக ஆனது.

ஆகஸ்ட மாதத்தில் தொடர்ந்து 2 ஆவது வாரமாக எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டடுள்ளன. கடந்த வாரம் ரோன் 95 பெட்ரோல் மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலைகள் 4 காசும் டீசல் விலை 6 காசும் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.