முகப்பு > முதன்மைச் செய்திகள் > அரசு அதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கை  நடத்தினால்,  உடனடியாகப் புகார் செய்வீர்
முதன்மைச் செய்திகள்

அரசு அதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கை  நடத்தினால்,  உடனடியாகப் புகார் செய்வீர்

கோலாலம்பூர், ஆக. 9-

அரசு     அதிகாரிகள்   வரவுக்கு  மீறி வாழ்க்கை  நடத்தினால்   பொதுமக்கள்   அது   குறித்து  உடனடியாகப்     புகார்   செய்ய    வேண்டுமென்று எம்ஏசிசி எனப்படும் மலேசிய     ஊழல்    தடுப்பு      ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அவர்கள்   வருமானத்தை  மீறிய   ஆடம்பர    வாழ்க்கை    வாழ்வது   எப்படி   என்பதை  எம்ஏசிசி   முடிவு  செய்யும்.  அவர்களின்  சொத்துகள்   சட்டப்பூர்வமாக  பெறப்பட்டவைதானா   என்பதை   அது   கண்டறியும்,  என  எம்ஏசிசியின்   துணைத்   தலைமை   ஆணையர் (நடவடிக்கை)  முகமட்  அசாம்  பக்கார்  தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிகழ்ச்சியில்  நடத்தப்பட்ட நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு   அவர் பேசினார். எம்ஏசிசி  வெறுமனவே   இல்லையென்றும்    அது   உயர்   அதிகாரிகளைக்  கண்காணிப்பதுடன்   அவர்களின்  சொத்துகள்   எப்படி   வந்தன  என்பதை  ஆராய்ந்து   கொண்டிருப்பதாகவும்   அசாம்   குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன