முகப்பு > முதன்மைச் செய்திகள் > மதுபானத்தில் மெத்தனல் விஷம்; மரண எண்ணிக்கை 19ஆக உயர்வு; எழுவர் கைது
முதன்மைச் செய்திகள்

மதுபானத்தில் மெத்தனல் விஷம்; மரண எண்ணிக்கை 19ஆக உயர்வு; எழுவர் கைது

கோலாலம்பூர், செப் 19
விஷத்தன்மை கொண்ட மதுபானத்தை அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மண்டாலே விஸ்கி, கிங் பிஷர் பீர், கிராண்ட் ரோயல் விஸ்கி ஆகிய மது பானங்களை அருந்தியதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெத்தனல் விஷம் அந்த மதுபானத்தில் கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பெரும்பாலானோர் அந்த விஷத்தால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதனால் இவர்கள் வயிற்று வலி, வாந்தி, தலை வலி, மூச்சுத் திணறல், ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமும் சிறுநீரும் பரிசோதனைக்காக அனுப்பப்படுள்ளன எனவும் அவர் தெரிவத்தார்.

இந்த மெத்தனல் விஷத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்துள்ளார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மதுபானக் கடைகளை நடத்தியவர்கள் உட்பட அவற்றை விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட மதுபானங்கள் அடையாளம் காணப்பட்ட பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விஸ்கி அடங்கிய 1,030 போத்தல்கள், 1,767 டின் பீர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 304இன் கீழ் விசாரைணை செய்யப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன