அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நஜிப் மீண்டும் கைது ; நாளை மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகிறார் !
முதன்மைச் செய்திகள்

நஜிப் மீண்டும் கைது ; நாளை மீண்டும் குற்றஞ்சாட்டப்படுகிறார் !

கோலாலம்பூர், செப்.19-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட விருக்கிறார். நாளை மாலை 3 மணி அளவில் அதிகார முறைக்கேடு தொடர்பில் நஜிப் மீது கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட விருக்கிறது.

இன்று மாலை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் 23 ஆவது செக்‌ஷனின் கீழ் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட விருக்கிறது.

இன்று மாலை 4.13 மணி அளவில் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தை வந்தடைந்தவுடன் நஜிப் கைது செய்யப்பட்டுள்ளார்.  நஜிப்புக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாக கூறப்படும் 260 கோடி ரிங்கிட் விவகாரம் தொடர்பில் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்படும் என கூறப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன