அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 10 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப் !
முதன்மைச் செய்திகள்

10 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையை செலுத்தினார் நஜிப் !

கோலாலம்பூர், செப்.21 –

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை  தமக்கு விதிக்கப்பட்ட 35 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையில் முதல் கட்டமாக 10 லட்சம் ரிங்கிட்டை வெள்ளிக்கிழமை செலுத்தினார்.  காலை 10.50 மணி அளவில் வெள்ளை நிறத்திலான பெல்பைர் காரில் , நஜிப் ,  கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

இளஞ்சிவப்பு நிறத்திலான உடை அணிந்திருந்த நஜிப், உடனடியாக செஷன் நீதிமன்ற ஜாமீன் தொகை செலுத்தும் முகப்புக்கு சென்றார். ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். காரில் ஏறும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப், நீதிபதி கேட்டு கொண்டதற்கு இணங்க முதல் கட்டமாக 10 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையை செலுத்தி விட்டதாக கூறினார்.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் 230 கோடி ரிங்கிட் நிதி மோசடி தொடர்பில் , டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நஜிப் விசாரணைக் கோரியுள்ளார்.

35 லட்சம் ரிங்கிட் ஜாமீன் தொகையில் இரு நபர் உத்தரவாதத்துடன் நீதிபதி அசூரா அல்வி, நஜிப்பை விடுதலை செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன