முகப்பு > சமூகம் > பெர்னாமா தமிழ்ச் செய்தி – இரவு 11.30க்கு மறு ஒளிபரப்பு
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பெர்னாமா தமிழ்ச் செய்தி – இரவு 11.30க்கு மறு ஒளிபரப்பு

கோலாலம்பூர், செப். 21-

பெர்னாமா அலைவரிசை 502 இல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளியேறிவரும் தமிழ்ச் செய்திகள் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இதன் மறு ஒளிபரப்பு, நள்ளிரவு 12.30-க்கு ஒளியேறி வந்தது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதன் மறு ஒளிபரப்பு நள்ளிரவு 12.30 மணியிலிருந்து இரவு 11.30-க்கு மாற்றப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் இம்மறு ஒளிபரப்பு இரவு 11.30-க்கு ஒளியேறி வருவதாக பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைவர் காந்தி காசிநாதன் பத்திரிக்கை அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

பெர்னாமா செய்தியின் மறு ஒளிபரப்பு நேரத்தை மாற்றும்படி பலர் கேட்டுக்கொண்டனர். நள்ளிரவு என்பதால் பெரும்பாலோர் மறு ஒளிபரப்பு செய்தியை பார்க்க முடியாமல் போவதாக தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

எனவே அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று இரவு 11.30 மணிக்கு செய்தியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறோம். இதனால், இரவு 7 மணிக்கு பெர்னாமா செய்தியை பார்க்க முடியாதவர்கள், மறுஒளிபரப்பை இரவு 11.30 க்கு பார்க்கலாம் என்று காந்தி காசிநாதன் மேலும் கூறினார்.

2015 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட பெர்னாமா தமிழ்ச் செய்தி, நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் புதிய பொலிவோடு கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் ஒளியேறி வருகிறது. அரசாங்க தகவல்கள் மட்டுமின்றி இந்தியர் நலன் சார்ந்த செய்திகளுடன் ஒளியேறி வரும் பெர்னாமா தமிழ்ச் செய்திக்கு மலேசிய இந்தியர்கள் தொடர்ந்து ஆரதவு தரவேண்டும் என்றும் காந்தி காசிநாதன் கேட்டுக்கொண்டார்.

பெர்னாமா தமிழ்ச் செய்தியை ஆஸ்ட்ரோ 502 அலைவரிசையில் பார்ப்பதோடு, www.bernama.com வழி பெர்னாமா இணைய தொலைக்காட்சி மற்றும் BERNAMA NEWS CHANNEL யூ டியூப் (You Tube) அலைவரிசையிலும் செய்திகளை நேரடியாக, அதே நேரத்தில் காணலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன