அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் -டத்தோ ஜமருல்கான் காடீர்
முதன்மைச் செய்திகள்

இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் -டத்தோ ஜமருல்கான் காடீர்

கோலாலம்பூர், செப் 21
இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட பிஜபிஎம் எனப்படும் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் அதன் தலைவர் டத்தோ ஜமருல்கான் காடீர் தெரிவித்தார்.

இன்று தலைநகரில் பிஜபிஎம் கட்சியின் அதிகாரபூர்வ தொடக்கம் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மலாய்காரர்களை அடுத்து நாட்டில் சுமார் 800,000 இந்திய முஸ்லிம்கள் உள்ளன. நடப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கு இந்திய முஸ்லிம்களுக்கென எந்தக் கட்சியும் இதுவரை இல்லை. அவர்களின் எதிர்காலத்திற்காக அமைக்கப்பட்ட இக்கட்சி அரசாங்கத்துடனும் அரசியல் கட்சிகளுடனும் அரசு சாரா இயக்கங்களுடனும் இணைந்து நாட்டின் மேம்பாட்டிற்கும் மலேசியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தக் கட்சி குறித்து அதன் தகவல் மற்றும் வியூக தலைவர் அரிப் ஃபர்ஹன் அப்துல்லா கூறுகையில், நாட்டிலுள்ள அனைத்து இந்திய முஸ்லிம்களின் நலன்களை கட்டிக் காப்பதற்கு இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய கட்சி அமைப்பது தொடர்பில் தேசிய சங்க பதிவகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. அங்கிருந்து கட்சிக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்தப் பின்னர் உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதும் மலேசிய இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

பின்னர் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சியின் மாபெரும் பேராளர் மாநாடு நடைபெறும். இதில் கலந்து கொள்ள மலேசிய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இக்கட்சி இன மற்றும் சமய பேதங்கள் இன்றி இக்கட்சி மலேசியர்களின் உரிமை குரலாக ஒலிக்கும். அதோடு இந்நாட்டில் இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்னைகளைக் களைவதற்கும் அதற்கான தீர்வை முன்னெடுப்பதற்கும் இக்கட்சி ஒரு தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய மலேசியா என்ற சிந்தனை அனைவரிடமும் மேலோங்கியுள்ளது. இதுதான் புதிய கட்சியை தொடங்குவதற்கான உத்வேகத்தை தந்துள்ளது. இத்தருணத்தில் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சி, இதர கட்சிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் மோசின் அப்துல், தலைமைச் செயலாளர் ஷாஹுல் ஹமிட் ஷேக் தாவுத், பொருளாளர் முகமட் ஹன்சாரி முகமட்இப்ராஹிம், மகளிர் தலைவி ஃபாத்திமா சைனுடின், இளைஞர் தலைவர் அஸ்ரின் அன்வெர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன