ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அரசாங்கத்தின் முழு கவனமும் நிர்வாகம், நிதி நிலைமைதான்! டாக்டர் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

அரசாங்கத்தின் முழு கவனமும் நிர்வாகம், நிதி நிலைமைதான்! டாக்டர் மகாதீர்

லண்டன், செப்.24-

நாட்டின் நிர்வாகம் மற்றும் நிதி நிலைமை ஆகியவற்றை மீட்சிப் பெறச் செய்வதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தற்போது கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இதற்கு முன்பு இருந்த அரசு கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நாட்டின் நிர்வாகம், நிதி நிலைமை மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியாவே சீரழிந்திருக்கும். இதில் மலேசியாவைப் பிறர் ஆட்சி செய்து நமது அதிகாரத்தை இழக்க வேண்டியிருக்கும்.

இதில் தே.மு.வை வீழ்த்த மக்கள் பக்காத்தானுக்கு ஆதரவளித்ததற்குக் காரணம் நாட்டின் மேம்பாடு, வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தே.மு கவனம் செலுத்தவில்லை. அதனால் அப்போதைய அரசின் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை லஞ்ச ஊழலில் ஈடுபட்டு நாட்டின் நிர்வாகத்தை வீணாக்கி விட்டது.

இவர்கள் ஆட்சியாளருக்கு விசுவாசமாக இல்லை, மாறாக உறுப்புக்கட்சிகளுக்குத்தான் விசுவாசமாக இருந்திருக்கின்றனர் என்று இங்கு வசிக்கும் 200 மலேசியர்களுடன் சேர்ந்து கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களிடம் மகாதீர் குறிப்பிட்டார்.

இதனிடையே இதில் நாட்டின் நிதி நிலைமை பற்றி குறிப்பிட்ட மகாதீர், அதை மீட்சியடையச் செய்வது சிரமம் என்றாலும் மீட்சிப் பெறச் செய்ய வேண்டியது அவசியமாகும். இதில் கடனை அடைக்க சொத்துகளையும் அரசு விற்கக்கூடும்.

முந்தைய அரசு வெ.1 லட்சம் கோடி கடனைக் கொண்டிருந்ததால் அதைச் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். காரணம் இதனால் பிறகு நாடு திவாலாகும் அளவிற்குப் பிரச்னை ஏற்படக்கூடிய சாத்தியமும் உண்டு. இதில் கடன் வாங்கிய பணமும் எங்கிருக்கிறது என்று தெர்யவில்லை.

நாட்டின் பட்ஜெட்டில் எப்போதும் குறைவாய் இருப்பதற்குக் காரணம் உயர்கல்வி கற்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் உட்பட அரசின் நிர்வாகத்திற்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் போதுமான பணமில்லாமல் இருக்கிறது. இதில் இன்னும் சீரமைக்க வேண்டிய நிறைய விவகாரங்கள் இருக்கின்றன. அப்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டால் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு அரசு தீர்வு கண்டு விடும் என்று லங்காவி தொகுதி எம்.பி.யுமான மகாதீர் மேலும் கூறினார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன