திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > 2018 ஆம் ஆண்டுக்கான புஸ்காஸ் விருதை வென்றார் சாலா !
விளையாட்டு

2018 ஆம் ஆண்டுக்கான புஸ்காஸ் விருதை வென்றார் சாலா !

லண்டன், செப்.25-

2018 ஆம் ஆண்டுக்கான ஃபிபாவின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை லிவர்புல் கிளப்பின் உச்ச நட்சத்திரம் முஹமட் சாலா வென்றுள்ளார். கடந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் எவெர்டனுக்கு எதிராக சாலா போட்ட கோல் சிறந்த கோலாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு  ஆட்டக்காரர்களை லாவகமாக ஏமாற்றி டி பகுதிக்குள் நுழைந்து எவெர்டன் கோல் காவலர் பிக்போர்ட்டை ஏமாற்றி கோலடித்த சாலாவின் கோல் சிறந்த கோலாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது. அ

தேவேளையில் ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கேரத் பேல் போட்ட இரண்டு கோல்களையும் பின்னுக்குத் தள்ளி சாலா புஸ்காஸ் விருதை வென்றுள்ளார்.

கடந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் 32 கோல்களைப் போட்ட சாலா, லிவர்புல் அணிக்கு ஒட்டு மொத்தமாக 44 கோல்களைப் போட்டிருந்தார். இம்முறை ஃபிபாவின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கும் சாலா பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதில், மொட்ரிச்சிடம் தோல்வி கண்ட சாலா, புஸ்காஸ் விருதை வென்று லிவர்புல் ரசிகர்களுக்கு ஆறுதலை தந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன