செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான எம்ஏசிசி விசாரணை முடிவடைந்தது
முதன்மைச் செய்திகள்

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மீதான எம்ஏசிசி விசாரணை முடிவடைந்தது

கோலாலம்பூர், செப். 25
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணையியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீதான எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன்விசாரணை முடிவடைந்தது.

அதன் அறிக்கை சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மேல் நடவடிக்கை அவர்தான் எடுக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் சுக்ரி அப்துல் தெரிவித்துள்ளார்.

விசாரணை செய்வது மட்டுமே எம்ஏசிசியின் கடமையாகும். ரோஸ்மா மீது வழக்கு தொடர்வதா இல்லையா என்பதுதை சட்டத்துறை தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
20க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளை ரோஸ்மா எதிர்கொள்ளவிருக்கிறார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த ஜூன் மாதம் ரோஸ்மாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய எம்ஏசிசியின் புத்ராஜெயா தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன