திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தெறிக்கவிடும் தளபதியின் தமிழாழே ஒன்னானோம்! முழு பாடல்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

தெறிக்கவிடும் தளபதியின் தமிழாழே ஒன்னானோம்! முழு பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் இளம் இயக்குநர் அட்லி இயக்குவரும் திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படத்தின் முதல் லுக் விஜய் பிறந்தநாளன்று வெளிவந்து, புதிய சாதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பின்னிரவு வெளிவந்த இத்திரைப்படத்தின் முதல் பாடலின் 30 நிமிட டீசர் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது. குறிப்பாக வெளியிட்ட 12 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் இதை பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மலேசிய நேரப்படி 6 மணிக்கு தமிழாழே ஒன்னானோம், மாறாது எந்நாளும் என்ற பாடல் வெளியிடப்பட்டது.

https://www.saavn.com/p/song/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal/Aalaporaan-Thamizhan-From-Mersal/HB4FAQBkQlo

அன்பக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்… மகுடத்தைத் திரிக்கிற ‘ழ கரத்தைச் சேர்த்தோம் என்று தமிழின் புகழை உரக்கச் சொல்லுவதைப் போல இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் துள்ளல் இசையில் தற்போது மெர்சல் பாடல் சமூக தளங்களை தெறிக்கவிடுகின்றது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன