சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பாலிங் எம்பி அப்துல் அஸீஸ் கைது
முதன்மைச் செய்திகள்

பாலிங் எம்பி அப்துல் அஸீஸ் கைது

கோலாலம்பூர், செப். 25
எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மானை கைது செய்தது.

அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் அப்துல் அஸீஸும் அவரது சகோதரரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முந்தைய ஆட்சியில், அப்துல் அஸீஸ் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி அவர் தமது உறவினர்களுக்கு அரசு குத்தகைகளைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம்.

நாளை காலை அவர், நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்றும், விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

கடந்த மே 23ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் அவரின் மூன்று வீடுகளில் சோதனை நடத்தி வெ. 12 லட்சம் மதிப்புள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பண நோட்டுகள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான அஸீஸ், பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பண நோட்டுக்கள் புத்ரா ஒரே மலேசியா கிளப்புக்குச் சொந்தமாவை என்றும் வெ. 500,000 பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவுக்கு அனுப்பப்பட வேண்டிய நிதியுதவி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன