வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மக்கள் சேவையை முன்வைத்து போட்டியிடுகிறேன்! -செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்
முதன்மைச் செய்திகள்

மக்கள் சேவையை முன்வைத்து போட்டியிடுகிறேன்! -செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ்

கிள்ளான், செப். 25-
ஒரு சட்டமன்ற உறுப்பினர் எனும் நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தீர்வு காணும் வகையில் பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை, கோத்தா ராஜா கிளைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடவிருப்பதாக செந்தோசர்சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கூறினார்.

மக்கள் பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். அதுவும் செந்தோசா மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து சேவையாற்றி வருகிறேன். மக்கள் நலன்தான் எனக்கு முக்கியம். நான் பதவியில் இருந்தால்தானே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால் மத்திய செயலவை, கோத்தா ராஜா கிளைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடவிருப்பதாக குணராஜ் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆதரவில் நான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினராக வீற்றிருக்கிறேன். இந்நிலையில் பிகேஆர் கட்சியில் முக்கியப் பதவியாக கருதப்படும் மத்திய செயலவை உறுப்பினர், கோத்தாராஜா கிளைத் தலைவர் ஆகிய பதவிகளில் வெற்றி பெற்றால் இப்பதவிகள் மூலம் மக்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்ற முடியும் என்றார் ஜி.குணராஜ்.

பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர், கோத்தா ராஜா கிளைத் தலைவர் ஆகிய இரு பதவிகளுக்கு போட்டியிடும் தமக்கு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

குணராஜ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிகேஆர் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அரசியலுக்கு வரும் முன் குணராஜ் அரசு சாரா இயக்கங்கள் வழி மக்கள் பிரச்சினை, ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முழு மூச்சாக செயல்பட்டார். அதேநேரத்தில் 7 ஆண்டுகள் செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினராக இருந்தார். செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்கிற்கு அரசியல் செயலாளராக சேவையாற்றியுள்ளார். இப்பதவிகளின் வழி மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் குணராஜ்.

இந்த மூலதனத்தில் கடந்த 2013இல் மத்திய செயலவைக்கு போட்டியிட்டார். தற்போது இரண்டாவது தவணையாக மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறார். அதேநேரத்தில் கோத்தா ராஜா கிளைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் குணராஜ் வெற்றி பெற்று வந்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து கோத்தா ராஜா நாடாளுமன்ற மக்களுக்கு சேவையைக் கொண்டு வருவார் என்பதால் பிகேஆர் உறுப்பினர் ஜி. குணராஜுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன