வியாழக்கிழமை, ஜனவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ஸ்பெயின் லா லீகா – முதல் தோல்வியை சந்தித்தன பார்சிலோனா, ரியல் மாட்ரிட் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ஸ்பெயின் லா லீகா – முதல் தோல்வியை சந்தித்தன பார்சிலோனா, ரியல் மாட்ரிட் !

மாட்ரிட், செப்.27 –

இந்த பருவத்துக்கான ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் , தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 0- 3 என்ற கோல்களில் செவியாவிடம் தோல்வி கண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் செவியா தனது மூன்று கோல்களையும் முதல் பாதி ஆட்டத்தில் போட்டது.

17 ஆவது நிமிடத்தில் செவியாவின் முதல் கோலை போர்ச்சுகல் தாக்குதல் ஆட்டக்காரர் ஆன்ட்ரி சில்வா போட்டார். நான்கு நிமிடங்களுக்குப் பின்னர் ரியல் மாட்ரிட் கோல் காவலர் கோர்த்துவா செய்த தவற்றை நன்கு பயன்படுத்தி கொண்ட செவியா தனது இரண்டாவது கோலைப் போட்டது.

முதல் பாதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய செவியா 39 ஆவது நிமிடத்தில் தனது மூன்றாவது கோலை விசாம் பென் யாடர் மூலம் போட்டது. இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட்டை தனது சொந்த அரங்கில் நான்கு முறை தொடர்ச்சியாக வீழ்த்தி செவியா சாதனைப் படைத்துள்ளது.

இதனிடையே மற்றொரு லீக் ஆட்டத்தில் , நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா 1 – 2 என்ற கோல்களில் லெகானேஸ் அணியிடம் தோல்வி கண்டது. 2015 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்துக்குப் பின்னர் ஒரே நாளில் ஸ்பெயினின் இரண்டு முன்னணி ஜாம்பாவன் கிளப்புகள் தோல்வி கண்டுள்ளன.

12 ஆவது நிமிடத்தில் பிலிப்பே கோத்தின்ஹோ போட்ட கோலின் வழி பார்சிலோனா 1 – 0 என முன்னணி வகித்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் நபில் எல் சார் போட்ட கோலின் மூலம், லெகானேஸ் ஆட்டத்தைச் அமப்படுத்தியது. ஒரு நிமிடத்துக்குப் பின்னர் ஆஸ்கர் ரோட்ரிகுவேஸ் போட்ட கோல், லெகானேஸ் அணியின் வெற்றியை உறுதிச் செய்தது.

லெகானேஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தாலும், பார்சிலோனா லீக் பட்டியலில் 13 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கோல் வேறுபாட்டில் ரியல் மாட்ரிட் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன