ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > துன் மகாதீரை 7 முறை சந்தித்தாரா ஸாஹிட் ஹமிடி?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

துன் மகாதீரை 7 முறை சந்தித்தாரா ஸாஹிட் ஹமிடி?

கோலாலம்பூர், செப். 27-

டாக்டர் மகாதீருடன் நேருக்கு நேர் 7 முறை சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி மறுத்தார்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை 2 முறை சந்தித்ததை அம்னோ தேசியத் தலைவருமான அவர் ஒப்புக் கொண்டார். எனினும், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிகேஆர் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவில்லை எனவும் அவரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டதில்லை எனவும் பாகான் டத்தோக் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாஹிட் கூறினார்.

நான் 2 முறை சந்தித்தேனா அல்லது 7 முறை சந்தித்தேனா என்பது தேவதைக்கு மட்டுமே தெரியும். ஆனால், நான் 2 முறை சந்தித்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். 7 முறை சந்தித்தேன் என்ற புள்ளி விவரம் எனக்கு தெரியவில்லை.

கடந்த மே 9ஆம் தேதிக்கு பிறகு அன்வாரை நான் சந்திக்கவும் இல்லை அவருடன் தொடர்பு கொண்டு நான் பேசவும் இல்லை. என்னை சந்திக்க அவரும் பயப்படுகிறார். ஏனெனில் நான் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றேன் என்று அவர் கூறினார்.

2018 அம்ன பொதுப் பேரவையை முன்னிட்டு என்எஸ்டிபிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன