திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் எழு முனைப் போட்டி!
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் எழு முனைப் போட்டி!

போர்ட்டிக்சன், செப், 29-

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி நிலவுகின்றது. குறிப்பாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வாருக்காக காலி செய்யப்பட்ட போர்ட்டிசன் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் உட்பட 7 பேர் போட்டியிடுகிறார்கள்.

இத்தொகுதியில் போட்டியிட 8 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்த வேளையில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அதனால் இத்தொகுதியின் பிகேஆர் சார்பில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் சார்பில் முகமட் நசாரி மொக்தார், சுயேட்சை வேட்பாளர்களாக நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஶ்ரீ இசா சாமாட், லே சேக் யான், ஸ்டீவ் சான், கீ சீ யூவென், முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன