செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > பிக்பாஸ் 2 வெற்றியாளர் பட்டம் வென்றார் ரித்விகா !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

பிக்பாஸ் 2 வெற்றியாளர் பட்டம் வென்றார் ரித்விகா !

தமிழ் பிக்பாஸ் சீசன் 2 –ன் வெற்றியாளர் பட்டத்தை ரித்விகா கைப்பற்றியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு, விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

மூவரில் ஒருவரை வெளியே அழைத்துச் செல்ல பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் உள்ளே வந்தார். அவர் ரித்விகாவை அழைத்துச் செல்வதுபோல் பாவனை செய்துவிட்டு விஜயலட்சுமியை வெளியில் அழைத்துச் சென்றார். வெளியே வந்த விஜி பல விஷயங்களை பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

பிறகு போட்டியாளர்களுக்கு யார் யார் எதில் சிறந்தவர்கள் என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ஓவியாவை வரவேற்றார் கமல்ஹாசன். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கவில்லை எனக் கூறிய ஓவியா ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். பிறகு ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் பிக்பாஸ் உரையாற்றினார். ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் சொன்னதும் கண் கலங்கும் அளவிற்கு பதட்டமானர் ஐஸ்வர்யா.

அதேபோன்ற டயலாக்கை ரித்விகாவுக்கு பிக்பாஸ் சொன்னபோது பெரிதாக எதுவும் மாற்றமில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே பதட்டத்துடன் இருந்தார். பிறகு இருவரும் பிக்பாஸுக்கு உணர்வுப் பூர்வமாக நன்றி தெரிவித்தனர். வெற்றியாளரை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது, நானே கூட்டிவருகிறேன் எனச் சொல்லி உள்ளே சென்ற கமல்ஹாசன், நான் உங்களை உபசரிக்கிறேன் எனக் கூறி அரபிக் காஃபி போட்டுக்கொடுத்து உரையாடினார்.

அப்போது அவர் 30 வயதுவரை காபி குடித்தது கிடையாது எனக் கூறினார். இப்போ அதுவா சார் முக்கியம், சீக்கிரம் வின்னர் யாரென்று சொல்லுங்கள் என டிவி பார்த்தவர்கள் பலரும் புலம்பியிருப்பார்கள்.பிறகு விஸ்வரூபம் பாடல் ஒலிக்க இருவரையும் மேடைக்கு அழைத்து வந்தார் கமல். நான்கு பேர் இருக்கும்போது மூன்றுகோடிக்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும், ஒருவருக்கு மட்டுமே ஒரு கோடிக்குமேல் வாக்குகள் பதிவாகியுள்ளது எனக் கூறினார்.

இறுதியாக ஐஸ்வர்யா கையை முத்தமிட்டுவிட்டு, ரித்விகா கையை உயர்த்தி இவர்தான் டைட்டில் வின்னர் என்று கமல் அறிவித்தார். ரித்விகாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆஸ்கார் விருது வாங்கியதுபோல துள்ளிக்குதித்தார். வாழ்க்கையில் முதல்முறையாக வெற்றியடைந்திருப்பதாகக் கூறிய அவர், வாக்களித்த அனைவருக்கும் மனம் திறந்து நன்றி தெரிவித்தார்.

இறுதியில் அவர் சொன்னது முக்கியமான விஷயம், நீங்கள் எப்படி, எந்த நிரத்தில் இருந்தாலும், நம்பிக்கையோடு போட்டிபோடுங்கள் என்று கூறினார். பிக்பாஸ் ட்ராபியை கமல்ஹாசன் கையிலிருந்து பெற்ற ரித்விகா, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். இந்த வீடு பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக இரண்டாமிடம் பெற்ற ஐஸ்வர்யா தத்தா தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன