சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஒரு விரல் புரட்சி – வைரலாகும் சர்காரின் இரண்டாவது பாடல் !
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஒரு விரல் புரட்சி – வைரலாகும் சர்காரின் இரண்டாவது பாடல் !

சென்னை:

சர்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி பாடல் இன்று மாலை 6. 13 மணிக்கு வெளியிடப்பட்டது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அந்த பாடலை கேட்டவர்கள் அர்த்தமே புரியவில்லை என்று கூறி கலாய்த்தனர். அர்த்தம் சொன்ன பாடலாசிரியர் விவேக்கையும் கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் ஒரு விரல் புரட்சி என்கிற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சர்கார் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டது. சன் நெக்ஸ்ட் ஆப்பில் 5.30 மணிக்கு வெளியிட்டுவிட்டு, யூடியூபில் 6 மணிக்கு பதில் 6.13 மணிக்கு வெளியிடப்பட்டது.

நேற்று முதல் ஏமாளி, இன்று முதல் போராளி என்று துவங்கும் பாடல் வரிகளில் அரசியல் விமர்சனம் தெறிக்கிறது. ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே என்று பாடல் முழுக்க நமக்கு புரியும்படி எழுதியுள்ளார் விவேக். தெறிக்க விட்டுவிட்டீர்கள் சார் என்று விஜய் ரசிகர்கள் விவேக்கை பாராட்டியுள்ளனர். சிலரோ இந்த பாடலை முதலில் வெளியிட்டிருக்க வேண்டும் என்கின்றனர். வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய் அரசியலில் பெரும் மாற்றம் செய்வது போன்று கதை அமைத்துள்ளார் முருகதாஸ். இந்நிலையில் ஒரு விரல் புரட்சி பாடல் படத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன