சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > தெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜய் சேதுபதியின் 96
கலை உலகம்

தெலுங்கில் ரீமேக் ஆகிறது விஜய் சேதுபதியின் 96

விஜய் சேதுபதி – த்ரிஷா இணைந்து நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தை, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் டிராவல் போட்டோகிராஃபராக விஜய் சேதுபதியும் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஜனகராஜ் நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, ‘காதலே காதலே…’ பாடலுக்கு செம ரெஸ்பான்ஸ்! அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை சென்னையில் பார்த்து, அவருக்கு இந்தப் படம் பிடித்துப்போக இதை தெலுங்கில் ரீமேக் செய்யவும் முடிவெடுத்துள்ளார். அதில் நானி – சமந்தா ஜோடியை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இப்படம் மிகவும் பிடித்துள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன