சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > குடும்பத்துடன் விபத்தில் சிக்கி இளம் இசையமைப்பாளர் மரணம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

குடும்பத்துடன் விபத்தில் சிக்கி இளம் இசையமைப்பாளர் மரணம்

சென்னை, அக் 2

மலையாளத்தில் பிரபலமானவர் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர். 17 வயதிலேயே இசையமைப்பாளரான அவர் சென்ற வாரம் மனைவி மற்றும் மகளுடன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்கினார்.

அவரது 2 வயது மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் பாலா பாஸ்கர் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன