சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பெரும்பான்மை மிக முக்கியம்! டத்தோஸ்ரீ அன்வார்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

பெரும்பான்மை மிக முக்கியம்! டத்தோஸ்ரீ அன்வார்

போர்ட்டிக்சன், அக். 3-

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

தொகுதியிலிருந்து வெளியில் தங்கியுள்ள தொகுதி வாக்காளர்களும் வாக்களிப்பு தினத்தன்று இங்கு வந்து தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த இடைத்தேர்தலில் மேலும் 6 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மிகப்பெரிய எண்ணிக்கையிலான வாக்குகள் தமக்கு கிடைப்பது சிரமம் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

இம்மாதம் 13ஆம் தேதி நான் 200 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக் குழு அறிவிக்குமானால் என் முகத்தை நான் எங்கு வைத்துக் கொள்வது என்று அன்வார் கேட்டார்.

ஆகவே, கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது ஜோகூர்பாருவில் அல்லது போர்ட்டிக்சனுக்கு வெளியே தங்கியிருக்கக் கூடிய இத்தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க திரண்டு வர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன