முகப்பு > முதன்மைச் செய்திகள் > 6 தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி மரணம்
முதன்மைச் செய்திகள்

6 தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி மரணம்

கோலாலம்பூர், அக் 4-
தாமான் புத்ரா பெர்டானாவிலுள்ள ஈயக் குட்டை தவறி் விழுந்து மூழ்கிய ஆடவரை மீட்க சென்ற 6 தீயணைப்பு வீரர்களும் நீரில் மூழ்கி மாண்டனர்.
சிலாங்கூர் நீர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அவர்கள், ஈயக் குட்டையில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்தது.
மாலை 5.50 மணியளவில் அந்த ஈயக் குட்டையில் 17 வயது ஆடவர் விழுந்து மூழ்கியதாக நம்பப்படுகிறது. அந்த 6 தீயணைப்பு வீரர்களும் சம்பந்தப்பட்ட ஆடவரை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன