திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > டத்தோஸ்ரீ நஜீப்-டத்தின்ஸ்ரீ ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தம்
முதன்மைச் செய்திகள்

டத்தோஸ்ரீ நஜீப்-டத்தின்ஸ்ரீ ரோஸ்மா நீதிமன்றத்தில் நிறுத்தம்

கோலாலம்பூர், அக் 4
நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சூரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

1எம்டிபி நிறுவன மோசடி உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் இந்த சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இவர்களது வழக்கு ஒரே நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகத்தினர், நஜிப்பின் ஆதரவாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஜாலான் டூத்தாவிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர்.

டத்தோஸ்ரீ நஜீப் மீதான அதிகார துஷ்பிரயோகம், கள்ள நோட்டு செலவுகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் வழக்கு விசாரணை புத்ராஜெயாவிலுள்ள நீதி அரண்மனையில் நடைபெற வேண்டும் என அரசாங்க தரப்பு கோரியுள்ளது.

இருப்பினும், இம்மாதம் 31ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தரப்பு வழங்கறிஞராக டத்தோ சுலைமான் அப்துல்லா நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன