திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > சாம்பியன்ஸ் லீக் : நப்போலியிடம் வீழ்ந்தது லிவர்பூல் !
விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் : நப்போலியிடம் வீழ்ந்தது லிவர்பூல் !

நேப்லஸ், அக்.4-

2018/19 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் சி பிரிவுக்கான இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் 0 – 1 என்ற கோலில் இத்தாலியின் நப்போலியிடம் தோல்வி கண்டது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் லோரேன்சோ இன்சைன் போட்ட கோல், நப்போலிக்கு வெற்றியை தந்துள்ளது.

நப்போலியின் சொந்த அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அவ்வணி, லிவர்பூல் அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. ஆட்டம் முழுவதும் ஆக்கிரமித்த நப்போலி இறுதியில் லோரேன்சோ மூலம் தனது வெற்றி கோலைப் போட்டது. இந்த ஆட்டத்தில் தமது அணி சிறப்பாக விளையாடவில்லை என லிவர்பூல் நிர்வாகி ஜூர்கன் குலோப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே லிவர்பூல் ஆட்டக்காரர்களின் வேகத்தையும் விவேகத்தையும் கணிக்கும் வகையில் தமது ஆட்டக்காரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதாக நப்போலி நிர்வாகி கார்லோ அன்செலோட்டி தெரிவித்துள்ளார். கார்லோ அன்செலோட்டி இதுவரை லிவர்பூல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் வழி , நப்போலி 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைனை 3 – 2 என்ற கோல்களில் வீழ்த்திய லிவர்பூல் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன