அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அன்வாருக்காக துன் மகாதீரின் தேர்தல் பரப்புரை; வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்குமா?
முதன்மைச் செய்திகள்

அன்வாருக்காக துன் மகாதீரின் தேர்தல் பரப்புரை; வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்குமா?

போர்ட்டிக்சன், அக். 7
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது பரப்புரைகளில் ஈடுபடுவது அவருக்கான ஆதரவை மேலும் அதிகரிக்கும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்தார்.

டாக்டர் மகாதீருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் இடையிலான ஒத்துழைப்பு நமக்கு மேலும் வலுவை சேர்க்கும் மேலும் இது அன்வாரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு நல்லப் பலனைக் கொண்டு வரும் என்று தாமான் இந்தான் பெர்டானாவில் நடைபெற்ற குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்ட பின் வான் அஸிஸா செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார்.

துன் மகாதீர் பொதுவாக இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதில்லை. ஆனால், இந்த முறை அன்வாருக்காக பிரசாரம் செய்வது பெருமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன