கோலாலம்பூர், அக். 7-

ஆசிய கட்டழகர் போட்டியின் வெற்றியாளரான முகமட் ஷாருல் அஸ்மான் மை மகேன், 4ஆவது முறையாக அப்பட்டத்தை மீண்டும் வென்று அதிரடி படைத்தார். இந்நிலையில் தமது அடுத்த இலக்கு உலக கட்டழகர் போட்டி என அவர் கூறியுள்ளார்.

இந்திய மண்ணில் உடல் கட்டழகராக தேர்தெடுக்கப்பட்டது தமக்கு தனி உத்வேகத்தை கொடுத்திருப்பதாக ஷாருல் அஸ்மான் தெரிவித்தார். இந்த முறை கடும் போட்டி நிலவியதாக அவர் மேலும் கூறினார்.

இப்போட்டியில் ஈரான், வியட்நாம் வீரர்களுடன் உபசரணை நாடான இந்தியாவின் போட்டியாளரும் கடுமையான நெருக்குதல் வழங்கினார்கள். இந்நிலையில் ஆசிய உடல் கட்டழகர் போட்டியில் வென்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், உலகக் கட்டழகர் போட்டியில் ஷாருல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உலகக் கட்டழகர் போட்டி டிசம்பர் 11ஆம் தேதி தொடக்கம் 17ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறுகின்றது. 3ஆவது முறையாக உலக கட்டழகர் பட்டத்தை வெல்ல வேண்டுமென்ற இலக்கை நான் கொண்டுள்ளேன், திங்கள்கிழமை மலேசியா திரும்பிய பிறகு முழு பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் ஷாருல் கூறினார்.

சீரான உணவு முறையை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில் தொடர் பயிற்சியின் மூலம் தம்மால் உலகக் கட்டழகர் பட்டத்தை வெல்ல முடியுமென ஷாருல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.