அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சிரியா ஏ : ஜுவெண்டெஸை தடுப்பது யார்?
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சிரியா ஏ : ஜுவெண்டெஸை தடுப்பது யார்?

ரோம், அக். 7-

இத்தாலி சிரியா ஏ கிண்ண கால்பந்து லீக் போட்டியில் தொடர்ந்து வெற்றியைப் பதிவு செய்து வரும் ஜுவெண்டெஸின் அதிரடி வெற்றியை யார் தடுத்து நிறுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரையில் 8 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் அனைத்திலும் ஜுவெண்டெஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலியின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ஹுடேசியை ஜுவெண்டெஸ் சந்தித்து விளையாடியது. தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவ்வப்போது ஜுவெண்டெஸ் தாக்குதலை முன்னெடுத்தது.

முதல்பாதி ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் ரொட்ரிகோ பென்டங்கர் ஜுவெண்டெஸ் அணிக்கான முதல் கோலை அடித்தார். அடுத்த 4ஆவது நிமிடத்தில் ஜுவெண்டெஸ் அணிக்கான இரண்டாவது கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.

தமக்கு எதிரான அமெரிக்காவின் மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த போதும், அது குறித்த எந்த சலசலப்பும் ரொனால்டோ முகத்தில் தெரியவில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார்.

பிற்பாதியில் ஆட்டத்தை சமப்படுத்த ஹுடேசி போராடினாலும் அவ்வணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 0 என்ற கோல் எண்ணிக்கையில் ஜுவெண்டெஸ் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ஜுவெண்டெஸ் 24 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன