திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மாஹ்ரேசை நம்பி ஏமாந்தது மென்.சிட்டி !
விளையாட்டு

மாஹ்ரேசை நம்பி ஏமாந்தது மென்.சிட்டி !

லண்டன், அக்.8-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தும் முயற்சியில் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் கோல் ஏதுமின்றி மென்செஸ்டர் சிட்டி சமநிலைக் கண்டது.

ஆக கடைசியாக 2003 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் சிட்டி, அன்பீல்ட் அரங்கில் லிவர்பூலை வீழ்த்தியது. அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தியதில்லை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டிக்கு வெற்றி பெற அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

எனினும் 85 ஆவது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை, மத்திய திடல் ஆட்டக்காரர் ரியாட் மாஹ்ரேஸ் மேலே உதைத்து ஏமாற்றம் தந்தார். இந்த பினால்டியை எடுக்க கப்ரியல் ஜீசஸ் ஆர்வம் காட்டினாலும் இறுதியில் மாஹ்ரேஸ் அந்த பினால்டியை எடுப்பதற்கு நிர்வாகி பெப் குவார்டியோலா அனுமதி தந்தார்.

மென்செஸ்டர் சிட்டியின் பயிற்சியில் பெரும்பாலான நேரங்கில் மாஹ்ரேஸ், பினால்டியை உதைத்து பயிற்சி பெறுவதைப் பார்த்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்க தாம் உத்தேசித்ததாக குவார்டியோலா கூறினார். ஆக கடைசியாக கிடைத்த 6 பினால்டி வாய்ப்புகளில் மாஹ்ரேஸ், நான்கு பினால்டியைக் கோலாக்குவதில் தோல்வி கண்டுள்ளார்.

இதனிடையே லிவர்பூலின் சொந்த அரங்கில் அந்த அணியின் ஆட்டத்தரத்தை கட்டுப்படுத்தியதில் தமக்கு மகிழ்ச்சிதான் என குவார்டியோலா தெரிவித்துள்ளார். லிவர்பூலைக் கட்டுப்படுத்த தமது அணி மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன