கோலாலம்பூர், அக். 8-

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தருவிக்கக்கூடிய புதிய விலையிலான அகண்ட அலைவரிசைத் திட்டத்தின் வாயிலாக மக்கள் உண்மையாக நன்மையடைவதை அவை உறுதி செய்ய வேண்டும் என்று தொடர்புப் பல்லூடக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

இதில் மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) வெளியிட்ட அறிக்கையின்படி நடப்பு வாடிக்கையாளர்களுக்கு அவற்றின் சேவை விலையைக் குறைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனங்கள் வழங்கியிருக்கும் கழிவுத் திட்டங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் உடனடி நன்மைப் பெற முடியாது என்று கருதப்படுகிறது.

இதில் ஸ்ட்ரீமிக்ஸ் (Streamyx) பயனீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுக் காண எந்தப் பரிந்துரையும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் இவ்விவகாரம் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தாம் கூடிய விரைவில் சந்திப்புக் கூட்டம் நடத்தவிருப்பதாக பூச்சோங் தொகுதி எம்.பி.யுமான கோபிந்த் சிங் தமது முகநூலில் குறிப்பிட்டார்