வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > பெர்த்தில் அவசரமாகத் தரையிறங்கியதா எம்.எச்.149 ரக விமானம் ?
உலகம்முதன்மைச் செய்திகள்

பெர்த்தில் அவசரமாகத் தரையிறங்கியதா எம்.எச்.149 ரக விமானம் ?

கோலாலம்பூர், அக். 8-

தனது பாதை மாறிய பிறகு மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.149 ரக விமானம் ஆஸ்திரேலியா, பெர்த்தில் அவசரமாகத் தரை இறங்கவில்லை என்று எம்ஏபி தெரிவித்தது.

இதில் கேஎல்ஐஏவிலிருந்து மெல்பர்னுக்கு சென்றுக் கொண்டிருந்த இவ்விமானம் ஒரு பயணிக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறப்பட்டதும் உடனடியாகத் திரும்பி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.04 மணிக்கு பெர்த்தில் தரையிறங்கியது.

இதில் சம்பந்தப்பட்ட பயணிக்கு உதவி செய்யும் பொருட்டு இவருக்குச் சிகிச்சையளிக்கப்படுவதை உறுதி செய்ய பெர்த்துக்குத் திரும்பும்படி விமானப் பணியாளர்கள் அழைப்பு விடுத்தனர்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நோயாளியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு உத்தரவாதமளிக்கும் வகையில் பெர்த் விமான நிலையப் பணியாளர்கள் முன்னேற்பாடுகளைச் செய்து விட்டனர். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்துக்குத்தான் எம்ஏபி முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன