புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > மலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு
இந்தியா/ ஈழம்முதன்மைச் செய்திகள்

மலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு

புதுடில்லி, அக். 9
மலேசியாவில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தனது தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும்படி மலேசிய அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டது என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்த சட்டவிரோத இந்திய தொழிலாளர்கள் மலேசியாவிலே தொடர்ந்து சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது அவர்கள் மீண்டும் தங்களது நாட்டிற்கே திரும்பிச் செல்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று இந்தியா கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று புதுடில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தாம் சந்தித்து பேசியபோது இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது என்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் குலசேகரன் கூறினார்.

மலேசியாவிலுள்ள அந்நிய தொழிலாளர்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஒரு சுயேட்சைக் குழு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சுஷ்மாவிடம் தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அந்தக் குழு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பித்தப்பின் இந்தியாவைச் சேர்ந்த வேலை அனுமதி வைத்திருக்காத தொழிலாளர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி மலேசியா ஆலோசிக்கும் என குலசேகரன் குறிப்பிட்டார்.

சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் எந்த ஆட்சேபமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் தொடர்பான ஒரு புரிந்துணர்வு மகஜரில் மலேசியாவும் இந்தியாவும் ஜனவரி மாதம் கையெழுத்திட விருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

One thought on “மலேசியாவில் வேலை செய்யும் சட்டவிரோத இந்திய தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு

  1. Muthukumar

    பயனு தரும் செய்தி. பொது மன்னிப்பு தேதி அரிவித்த பின் நினைவூட்டும் படி ஒரு பதிவு செய்யுங்கள். பலருக்கும் உதவியாக அமையும் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன