புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வெள்ளம்
முதன்மைச் செய்திகள்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் வெள்ளம்

கிள்ளான், அக் 9
கிள்ளானில் ஜாலான் தெங்கு கிளானா, ஜாலான் மோய்ட் லிட்டல் இந்தியாவில் உள்ள ஜாலான் புலாசான் ஆகிய பகுதிகளில் இன்று மதியம் 2.00 மணியளவில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்ததாகவும் அந்தப் பகுதியில் உள்ள கடைகள் பாதிக்கப்பட்டதாகவும் சுற்றுலா நிறுவன உரிமையாளர் கே.பி.சாமி தெரிவித்தார்.

கேடிஎம். ரயில் நிலையம் இருக்கும் ஜாலான் ஸ்டேஷனிலும் முதல் முறையாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஜாலான் ஸ்டேஷன், ஜாலான் தெங்கு கிளானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடைகள் பாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

இதனால் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிரமங்களை எதிர்நோக்கினர். முழங்கால் அளவுக்கு நீர் உயர்ந்தது. இதனால், கடைகளிலிருந்த பொருட்களும் வெள்ள நீரில் சேதமடைந்துள்ளன. கிள்ளானில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க கிள்ளான் நகராண்மைக் கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பி.சாமி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன