இந்தியா செல்ல 2 வாரத்திற்கு விசா இல்லாத நுழைவுக்கு அனுமதியா?

0
47

புதுடில்லி, அக். 9
இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்களுக்கு குறிப்பாக ஆன்மிகம் மற்றும் சமய நோக்கத்துடன் இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு 2 வாரத்திற்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை இந்தியா வழங்க வேண்டும் எனும் பரிதுரையை முன் வைத்ததாகவும் அதனை பரிசீலிப்பதற்கு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் இணக்கம் தெரிவித்ததாகவும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

புதுடில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நடத்திய சந்திப்பின் போது இந்த விசா கட்டண உயர்வு விவகாரத்தை எழுப்பியதாக அவர் கூறினார்.

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. முகப்பிட சேவை வழி பெறப்படும் விசா கட்டணம் 462 வெள்ளி 52 காசாக உயர்த்தப்பட்டது. சேவைக் கட்டணம் இதில் அடங்க வில்லை. இது ஓராண்டுக்காண விசா ஆகும். இதற்கு முன்பு இருந்த 194 வெள்ளி 56 காசு கட்டணத்தை கொண்ட 6 மாத விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இ கட்டணமும் 200 வெள்ளியிருந்து 320 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகமான இந்தியர்கள் மலேசியாவில் வாழ்கின்றனர். 20 இவர்களில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். எனவே, 2 வார விசா அற்ற நுழைவு அனுமதியை இந்தியா வழங்கினால் இந்தியாவுக்கான சுற்றுலாத் துறை வலுவடையும் என ஜசெக தேசிய உதவித் தலைவருமான குலசேகரன் என குலசேகரன் சுட்டிக்காட்டினார்.