திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு குறி வைத்துள்ள மொரின்ஹோ !
விளையாட்டு

இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு குறி வைத்துள்ள மொரின்ஹோ !

மென்செஸ்டர், அக்.10 –

வரும் ஜனவரி மாதம் புதிய ஆட்டக்காரர்களை வாங்க உத்தேசித்துள்ள மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு ஆட்டக்காரர்களையும் விலைக்கு வாங்க மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் தமக்கு போதுமான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் மொரின்ஹோ எதிர்பார்க்கின்றார்.

இந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதில் அந்த கிளப்பின் நிர்வாகம் போதிய நிதி ஆதரவை வழங்கவில்லை என மொரின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். குறிப்பாக தற்காப்பு பகுதியில் தமக்கு போதிய ஆட்டக்காரர்கள் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இதனால், இண்டர் மிலானின் ஸ்கிரினியர், ஏ.சி மிலான் அணியில் இருந்து அலெசியோ ரோமாக்னோலியை வாங்க மொரின்ஹோ திட்டமிட்டுள்ளார். மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து மொரின்ஹோ நீக்கப்படலாம் என பிரிட்டன் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் வேளையில் புதிய ஆட்டக்காரர்களை வாங்க மொரின்ஹோ திட்டமிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன