திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > எனது மகனுக்கு கிலியான் மப்பேவை அதிக அளவில் பிடிக்கும் – நெய்மர் சொல்கிறார்
விளையாட்டு

எனது மகனுக்கு கிலியான் மப்பேவை அதிக அளவில் பிடிக்கும் – நெய்மர் சொல்கிறார்

பாரிஸ், அக்.10 – 

பிரான்ஸ் அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பேவை எனது மகனுக்கு ரொம்ப பிடிக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த இளம் வீரரான கிலியான் மப்பே திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் முதன்மை லீக்கில் மொராக்கோ அணிக்காக விளையாடினார். பின்னர் தலைசிறந்த கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார்.

ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் வெற்றி பெற்ற சாம்பியன் பட்டம் வென்றது. பிரான்ஸ் வெற்றி பெற கிலியான் மப்பேவின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியான் மப்பே உடன் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாடி வருகிறார்.

எனது மகனுக்கு கிலியான் மப்பே மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது மகன் கிலியான் மப்பேவை அதிக அளவில் நேசிக்கிறான். நான் அவனை பயிற்சி இடத்திற்கு அழைத்து வந்தேன். அப்போது கிலியான் மப்பே உடனே இருந்தான்.

அப்போது மப்பே உடன் போட்டோ எடுக்க வேண்டும். அதை பள்ளியில் தனது நண்பர்களிடம் காட்ட வேண்டும் என்று விரும்பினான். போட்டி எடுத்தப்பிறகு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்’’ என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன