கோலாலம்பூர், அக். 10-
மஇகா துணைத் தலைவர் பதவிக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ சரவணனும் தொழிலதிபர் டான்ஶ்ரீ ராமசாமியும் நேரடிப் போட்டியை எதிர்கொள்கிறார்கள்.
புதன்கிழமை மஇகா தலைமையகத்தில் நடந்த வேட்புமனுத் தாக்கலில் டான்ஶ்ரீ ராமசாமி, துணைத் தலைவர் பதவிக்கு தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் டத்தோஶ்ரீ சரவணன் தமது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.
வேறு யாரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததால் இப்பதவிக்கு நேரடிப் போட்டி நிலவுகின்றது. டத்தோஶ்ரீ சரவணனுக்கு 1ஆம் எண்ணும் டான்ஶ்ரீ ராமசாமிக்கு 2ஆம் எண்ணும் கிடைத்தது.