கோலாலம்பூர், அக். 10-

மஇகாவின் 3 உதவித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றார்கள். இம்முறை தமது பதவியைத் தற்காத்துக் கொள்ள செனட்டர் டத்தோ டி. மோகன் போட்டியிடும் வேளையில் இதர 9 பேரும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

அதில் ஜோகூர் மாநில மஇகா தலைவர் டத்தோ அசோஜன், உமாராணி குழுமத்தின் உரிமையாளர் ராமலிங்கம், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ், தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவின் குமார்,ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மாணிக்கம் டத்தோ டி. முருகையா, ஆர்.கே. ரமணி கிருஷ்ணன், அன்பழகன் பொன்னுசாமி, கே.டி.பாலா, ஆகியோரும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்கள்.

பிற்பகல் 2.10 தொடங்கி 4.10 வரை உயர்மட்ட பதவிகளுக்காக வேட்புமனுத் தாக்கல் மஇகா தலைமையகத்தில் நடந்தது.