புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி திரட்ட ஏஜெண்டுகளா ?
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி திரட்ட ஏஜெண்டுகளா ?

புத்ரா ஜெயா, அக்.11-

தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு பெறவோ அல்லது நிதியை திரட்டவோ எந்த அமைப்புகளையும் தனி நபர்களையும் கல்வி அமைச்சு நியமிக்கவில்லை. ஆகவே, நிதி ஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் தொடர்பில் தலைமையாசிரியர்கள் நேரடியாக கல்வி அமைச்சுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இது தொடர்பில் அமைச்சின் ஏஜெண்டுகள் என கூறிக்கொண்டு யாராவது அணுகினால் போலீசில் புகார் செய்யும் படி அமைச்சு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை கூறியது. கல்வி அமைச்சிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை அணுகிய சிலர் அமைச்சின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தியிருப்பதாக புகார்கள் கிடைத்திருப்பதாக அமைச்சு கூறியது.

இதுதொடர்பில் நேற்று புத்ரா ஜெயா போலீஸ் தலைமையகத்தில் கல்வி அமைச்சு தரப்பில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன