சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சாலை வரியை புதுப்பிக்க வெ.5 கூடுதல் கட்டணம்?
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சாலை வரியை புதுப்பிக்க வெ.5 கூடுதல் கட்டணம்?

கோலாலம்பூர், அக்.11-

சாலை வரியை புதுப்பிக்கவும் மோட்டார் வாகன லைசென்சுகளை புதுப்பிக்கவும் 5 வெள்ளி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை போஸ் மலேசியா நேற்று உறுதிசெய்தது.

எனினும் வர்த்தக துறை சார்ந்த வாடிக்கையாளர்களுக்கே இந்த கூடுதல் கட்டணம் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி விதிக்கப்படும்.

வங்கி பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், புதிய அல்லது பழைய கார் விற்பனை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கே இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.

எனினும் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது என்று போஸ் மலேசியா நேற்று தெளிவுப்படுத்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன