அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜனவரி தொடக்கம் உணவகங்களில் சிகரெட் பிடிக்கத் தடை!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜனவரி தொடக்கம் உணவகங்களில் சிகரெட் பிடிக்கத் தடை!

சுங்கைப்பட்டாணி, அக்.11-

அடுத்தாண்டு (2019) ஜனவரி முதல் தேதியிலிருந்து நாட்டிலுள்ள அனைத்து உணவகங்களிலும் உணவுக்கடைகளிலும் சிகரெட் பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான பரிந்துரையை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த தடை அடுத்தாண்டு ஜனவரியில் நடப்புக்கு வரும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

ஏற்கெனவே பொது இடங்களிலும் அரசு கட்டடங்களிலும் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது உணவகங்களிலும் சாப்பாட்டுக் கடைகளிலும் சாலையோரம் உள்ள அங்காடி சாப்பாட்டுக் கடைகளிலும் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். தற்போது சில குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் அடுத்தாண்டு ஜனவரியில் அனைத்து உணவகங்களிலும் , உணவுக்கடைகளிலும் திறந்த வெளி அங்காடி சாப்பாட்டுக் கடைகளிலும் இந்தத் தடை அமலுக்கு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சுங்கைப்பட்டாணியில் நடைபெற்ற வாழ்க்கை முறையால் ஏற்படக்கூடிய நோய்கள் மீதான அனைத்துலக மாநாட்டின் நிகழ்வை தொடக்கி வைத்தபின் அவர் நிருபர்களிடம் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன