செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நீதிபதியின் நியமனத்தில் நியாயமில்லை! -அம்பிகா ஸ்ரீனிவாசன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

நீதிபதியின் நியமனத்தில் நியாயமில்லை! -அம்பிகா ஸ்ரீனிவாசன்

புத்ராஜெயா, அக்.11-

நீதிபதியின் நியமனத்தை நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது சற்றும் நியாயமில்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார்.

இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் நீதிபதி நியமனம் எந்த தரப்பிரரின் தலையீடுமின்றி சுதந்திரமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது சரியான முறையல்ல என்பதால் இந்தக் கருத்தை பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பொதுவாக நீதிபதி நியமனத்தில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. அதே போல் எந்த மாதிரியான ஒரு சூழலிலும் இதில் நாடாளுமன்றமும் தலையிட முடியாது என மேம் முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அம்பிகா குறிப்பிட்டார்.

அந்த வகையில் நீதிபதி நியமன ஆணையம் (ஜேஏசி) அரசியலமைப்புச் சட்ட அமைப்பாக வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர நாடாளுமன்றத்தின் கீழ் இருக்கக் கூடாது. இது தற்போதைய நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இதில் ஜேஏசியை ஓர் அரசியலைமைப்புச் சட்ட அமைப்பாக உருவாக்குவதற்கு கூட்டரசு அரசியலைமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் கருத்தில் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என தேசிய மனித உரிமைச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன