திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > ஈயக்குட்டையில் ஆடவர் சடலம்! போலீஸ் தீவிர விசாரணை
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஈயக்குட்டையில் ஆடவர் சடலம்! போலீஸ் தீவிர விசாரணை

மஞ்சோங், அக்.11-

ஜாலான் குவாரி தஞ்சோங் பத்து, பந்தாய் ரெமிஸ் மஞ்சோங்கில் உள்ள ஈயக்குட்டையில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடவரின் உடல் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பொட்டலம் போல் மடிக்கப்பட்ட நிலையில் அந்த உடல் கிடந்தது. அதன் தலையிலும் கால்களிலும் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்தது.

குருவி பிடிக்கச் சென்றவர்கள் அங்கு உடல் கிடந்ததைப் பார்த்து போலீசுக்கு தகவல் கூறியதாக மஞ்சோங் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஹனிப் ஓஸ்மான் கூறினார். ஈயக் குட்டையில் மிதந்த உடல் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த நபரின் கால்களில் பெரிய கல் கட்டப்பட்டிருந்தது. அந்த நபருக்கு 40 முதல் 50 வயது வரை இருக்கலாம். அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை. சுமார் 3 நாட்களுக்கு முன்பு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன