திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > எதிர்த் திசையில் லோரியைச் செலுத்தியதாக அழகேந்திரன் மீது குற்றச்சாட்டு
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

எதிர்த் திசையில் லோரியைச் செலுத்தியதாக அழகேந்திரன் மீது குற்றச்சாட்டு

கோலகுபுபாரு, அக்.11-

விபத்து ஏற்படும் அளவுக்கு எதிர்த் திசையில் லோரியை செலுத்தியதாக 37 வயது ஜி.அழகேந்திரன் மீது கோல குபுபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.

சுங்கை புவாயா ரவாங், டோல் சாவடி அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 432 ஆவது கிலோ மீட்டரில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு 7.01 மணிக்கு அவர் இந்த குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட லோரி இன்னொரு லோரியுடன் மோதி விபத்தில் சிக்கியது. 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 42 (1)இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை அதிகபட்சமாக 15 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும். நீதிபதி அஸ்மின் முஸ்தபா குற்றச்சாட்டப்பட்ட அழகேந்திரனுக்கு 9 ஆயிரம் வெள்ளி தனி நபர் ஜாமின் அனுமதித்தார். இந்த வழக்கு நவம்பர் 15இல் விசாரணைக்கு வரும்.

முன்னதாக எதிர்த் திசையில் அவர் லாரியைச் செலுத்திய விடீயோ, சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன