சென்னை, அக். 11-

மனிதவள அமைச்சர் குலசேகரன் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் தமிழக தொழிலாளர்கள் பிரச்னை, விசா கட்டண உயர்வு குறித்து புதுடில்லியில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சந்திப்பு நடத்தினார்.

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கான சுற்றுலா விசா கட்டணம் சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. முகப்பிட சேவை வழி பெறப்படும் விசா கட்டணம் 462 வெள்ளி 52 காசாக உயர்த்தப்பட்டது. சேவைக் கட்டணம் இதில் அடங்க வில்லை. இது ஓராண்டுக்காண விசா ஆகும். இதற்கு முன்பு இருந்த 194 வெள்ளி 56 காசு கட்டணத்தை கொண்ட 6 மாத விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இ கட்டணமும் 200 வெள்ளியிருந்து 320 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் 2 வாரங்களுக்கு இலசவ விசா குறித்த பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குலசேகரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்தார்.