வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டோல் இல்லாத நெடுஞ்சாலை எனக்கு உடன்பாடு இல்லை! – துன் மகாதீர்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

டோல் இல்லாத நெடுஞ்சாலை எனக்கு உடன்பாடு இல்லை! – துன் மகாதீர்

பாலி, அக். 12-
நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள டோல் இல்லாத நெடுஞ்சாலை எனும் வாக்குறுதியில் உண்மையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
டோல் கட்டண வசூலின்றி நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பது சாத்தியமற்றது என்றார் அவர்.

நாங்கள் அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை எனும் ஒரு எண்ணத்தில் இந்த தேர்தல் கொள்கை அறிக்கையை கொண்டு வந்தோம். இப்போது அரசாங்கத்தை அமைத்து விட்டோம். இந்த தேர்தல் கொள்கை அறிக்கை மிகப்பெரிய சுமையாக அமைந்து விட்டது என்று அவர் கூறினார்.

அப்போது நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். டோல் இல்லாத நெடுஞ்சாலை என்பதை செயல்படுத்த முடியாது என்பது எனக்கு தெரியும். பெட்ரோல் விலையை உயர்த்தினால் மட்டுமே நெடுஞ்சாலையை டோல் இன்றி இலவசமாக பயன்படுத்தும் ஒரே வழியாக அமையும் என்று அவர் சொன்னார். இங்கு நடைபெற்ற ஆசியான் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் அவர் பெர்னாமாவிடமும் ஆர்டிஎம்மிடமும் இதை கூறினார்.

டோல் வசூலை ரத்து செய்தால் பின்னர் யார் நெடுஞ்சாலையை பராமரிக்கப் போகிறார்கள். அல்லது யார்தான் புதிய நெடுஞ்சாலையை நிர்மாணிக்கப் போகிறார்கள் என்று பிரதமர் கேட்டார். நெடுஞ்சாலையை அமைக்கும்படி தனியார் துறையை கேட்டால் அவர்கள் லாபத்தை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் டோல் வசூலிப்பு செய்யாவிட்டால் எப்படி லாபத்தை பெற முடியும் என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன